1Ако слушаш добре гласа на Господа твоя Бог и внимаваш да вършиш всичките Негови заповеди, които днес ти заповядвам, тогава Господ твоят Бог ще те въздигне над всичките народи на света.
1இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
2И всички тия благословения ще дойдат на тебе и ще почиват на тебе, ако слушаш гласа на Господа твоя Бог.
2நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
3Благословен ще бъдеш в града, и благословен ще бъдеш на полето.
3நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
4Благословен ще бъде плодът на утробата ти, плодът на земята ти и плодът от добитъка ти, рожбите от говедата ти и малките от овците ти;
4உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
5благословен кошът ти и нощвата ти.
5உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
6Благословен ще бъдеш при влизането си и благословен ще бъдеш при излизането си.
6நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
7Господ ще направи да бъдат поразявани пред тебе неприятелите, които се повдигат против тебе; през един път те ще излизат против тебе, а през седем пътища ще бягат от пред тебе.
7உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
8Господ ще заповяда [да дойде] благословение на тебе в житниците ти и във всичките ти предприятия, и ще те благославя в земята, която Господ твоят Бог ти дава.
8கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
9Господ ще те утвърди като свет народ за Себе Си, според както ти се е клел, ако пазиш заповедите на Господа твоя Бог и ходиш в Неговите пътища;
9நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.
10И всичките племена на света ще видят, че ти се наричаш с Господното Име, и ще се боят от тебе.
10அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.
11Господ ще те направи да изобилваш с блага, в плода на утробата ти, в плода на добитъка ти и в плода на земята ти, върху земята, за която Господ се е клел на бащите ти да ти я даде.
11உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
12Господ ще ти отвори доброто Си съкровище, небето, за да дава дъжд на земята ти на времето му, и да благославя всичките дела на ръцете ти; и ти ще заемаш на много народи, а няма да вземаш на заем.
12ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும் நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
13Господ ще те постави глава, а не опашка, та ще бъдеш само отгоре и няма да бъдеш отдолу, ако слушаш заповедите на Господа твоя Бог, които днес ти заповядвам, да ги пазиш и вършиш.
13இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்,
14От думите, които днес ви заповядвам, да се не връщаш надясно или наляво, за да отидеш след други богове да им служиш.
14இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
15Но ако не слушаш гласа на Господа твоя Бог, и не внимаваш да вършиш всичките Му заповеди и повеленията Му, които днес ти заповядвам, то всички тия проклетии ще дойдат на тебе и ще почиват на тебе.
15இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.
16Проклет ще бъдеш в града и проклет ще бъдеш на полето.
16நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
17Проклети ще бъдат кошът ти и нощвата ти;
17உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும்.
18проклети ще бъдат плодът на утробата ти и плодът на земята ти, рожбите от говедата ти и малките от овците ти.
18உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
19Проклет ще бъдеш при влизането си и проклет ще бъдеш при излизането си.
19நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
20Господ ще изпраща върху тебе проклетия, смущение и разорение във всичките предприятия, които предприемаш да вършиш догде бъдеш изтребен и погинеш скоро, поради злите дела, чрез които си Ме оставил.
20என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.
21Господ ще направи да се залепва за тебе мор, догде те довърши от земята, в която отиваш да я завладееш.
21நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார்.
22Господ ще те поразява с охтика, с треска, с огница, с възпаление, със суша {Или, нож.}, с изсушителен вятър и с мана; и те ще те гонят догде погинеш.
22கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும், உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்.
23Небето над главата ти ще бъде мед, и земята под тебе желязо.
23உன் தலைக்கு மேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும்.
24Господ ще обръща дъжда на земята ти на прах и пепел; ще слиза на тебе от небето догде бъдеш изтребен.
24உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.
25Господ ще направи да бъдеш поразяван пред неприятелите си; през един път ще излизаш против тях, а през седем пътища ще бягаш отпред тях; и ще бъдеш тласкан по всичките царства на света.
25உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய்.
26Трупът ти ще бъде храна на всичките въздушни птици и на земните зверове; и не ще има кой да ги отпъжда.
26உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுவாரில்லாதிருப்பார்கள்.
27Господ ще те поразява с египетския струпей, с кръвотечения, с краста и със сърбеж, от които да не можеш да се изцелиш.
27நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
28Господ ще те поразява с умопобъркване, със слепота и с омайване на сърцето;
28கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார்.
29и ще ходиш пипайки всред пладне, както слепият пипа в тъмнината, и не ще имаш успех в пътищата си; а ще бъдеш само притесняван и обиран всеки ден, и не ще има кой да те избави.
29குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோகும்; உதவி செய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.
30Ще се сгодиш за жена, но друг мъж ще лежи с нея; къща ще построиш, но няма да живееш в нея; лозе ще насадиш, но няма да ядеш от плода му.
30பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.
31Говедото ти ще бъде заклано пред очите ти, и няма да ядеш от него; оселът ти ще бъде грабнат пред тебе, и няма да ти се върне; овците ти ще бъдат предадени на неприятелите ти, и не ще имаш, кой да [ги] избави.
31உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போகும்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும். விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.
32Синовете ти и дъщерите ти ще бъдат предадени на друг народ, и очите ти ще гледат и ще чезнат за тях всеки ден, но нищо не ще бъде в силата на ръката ти [да им помогне].
32உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக் கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போகும்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.
33Народ, когото не познаваш, ще изяде плода на земята ти и [на] всичките ти трудове; и ти ще бъдеш винаги само притесняван и измъчван.
33உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.
34Ще полудееш, като гледаш това, което ще виждат очите ти.
34உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.
35Господ ще те поразява с лошо възпаление в колената и в пищялите, тъй щото не ще можеш да се изцелиш, от стъпалата на нозете си до темето си.
35உன் உள்ளங்கால் தொடங்கி உன் உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும், தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.
36Господ ще заведе тебе и царя, когото ще си поставил над себе си, при народ, когото не си познавал, нито ти нито бащите ти; и там ще служиш на други богове, на дърво и камък.
36கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
37И ще станеш за учудване, за поговорка и за поругание на всичките племена, между които Господ ще те отведе.
37கர்த்தர் உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய்.
38Много семе ще изнасяш на полето, а малко ще събираш, защото скакалците ще го пояждат.
38மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும்.
39Лозя ще посаждаш и обработваш, а вино няма да пиеш [от тях], нито ще събираш [грозде], защото червей ще ги изяде.
39திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும்.
40Маслини ще имаш във всичките си предели, а с масло няма да се помазваш, защото маслините ти ще окапват.
40ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோகும்.
41Синове и дъщери ще раждаш, но те не ще бъдат за тебе, защото ще отиват в плен.
41நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.
42Всичките ти дървета и плода на земята ти, щурецът ще ги пояде.
42உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.
43Чужденецът, който е всред тебе, ще се издига горе и по-горе над тебе; а ти ще пропадаш долу и по-долу.
43உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய்.
44Той ще заема на тебе, а ти не ще заемаш на него; той ще бъде глава, а ти ще бъдеш опашка.
44அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.
45Всички тия проклетии ще дойдат върху тебе, та ще те гонят и ще те застигат, догде бъдеш изтребен; защото ти не послуша гласа на Господа твоя Бог, за да пазиш заповедите Му и повеленията, които ти заповяда.
45உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து,
46Това ще бъде за винаги знамение и чудо върху тебе и потомството ти.
46உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
47Понеже не си служил на Господа твоя Бог с веселие и със сърдечна радост поради изобилието на всичко,
47சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்,
48за това ще слугуваш на неприятелите си, които Господ ще прати против тебе, в глад, в жажда, в голота и в лишение от всичко; и Той ще тури на шията ти железен ярем догде те погуби.
48சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.
49Господ ще навлече против тебе народ от далеч, от земния край, като с орлово летене; народ чийто език не разбираш;
49கிழவன் என்று முகம்பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும்,
50народ със свиреп поглед, който не ще почете стар нито [ще] пожали млад;
50உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார்.
51и ще яде плода на добитъка ти и плода на земята ти догде починеш; който не ще ти остави ни жито, ни вино, ни масло, нито рожбите от говедата ти, нито малките от овците ти, догде те погуби.
51நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான்.
52Ще те обсади във всичките ти градове, догде по цялата ти земя изпопадат високите ти и укрепени стени, на които се надяваше; и ще те обсади във всичките ти градове из цялата земя, която Господ твоят Бог ти даде.
52உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான்.
53И тогава, при обсадата и притеснението, с което ще те притесни неприятелят ти, ще ядеш плода на утробата си, месата на синовете си и на дъщерите си, които Господ твоят Бог ти е дал.
53உன் சத்துருக்கள் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திர புத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.
54Оня мъж между вас, който е изтънчен и изнежен, ще гледа с немилостиво око на брата си, на жената, [която почива] на пазухата му и на останалите чада, които му оцелеят,
54உன் சத்துருக்கள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,
55та няма да даде ни на едного от тях от месото на чадата си, които ще яде; защото не ще му остане нищо при обсадата и притеснението, с което неприятелят ти ще те притесни във всичките ти градове.
55தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களின் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான்.
56Жената между вас, която е изтънчена и изнежена, която не би дръзнала да тури на земята стъпалото на ногата си по причина на изтънченост и изнеженост, ще гледа с немилостиво око на мъжа, [който почива] на пазухата й, на сина си, на дъщеря си,
56உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்;
57и на малкото си [дете], което е излязло измежду краката й, да! на чадата, които е родила; защото ще ги яде тайно поради лишението от всичко при обсадата и притеснението, с което неприятелят ти ще те притесни в градовете ти.
57உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான்.
58Ако не внимаваш да изпълняваш всичките думи на тоя закон, които са написани в тая книга, и не се боиш от това славно и страшно име ИЕОВА ТВОЯ БОГ,
58உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்,
59тогава Господ ще направи ужасни язвите върху тебе и язвите върху потомството ти, язви големи и непрестанни, и болести зли и непрестанни.
59கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,
60И ще навлече върху тебе всичките египетски болести, от които ти се боеше, и те ще се залепят за тебе;
60நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும்.
61още и всяка болест и всяка язва, която не е написана в книгата на тоя закон, Господ ще ги нанесе на тебе догде бъдеш изтребен.
61இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார்.
62Ще останете малцина на брой, - докато по множество бяхте като звездите на небето; защото ти не послуша гласа на Господа твоя Бог.
62திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப்போவீர்கள்.
63И както бе драго на Господа да ви струва добро и да ви умножава, така ще бъде драго на Господа да ви изтребва и да ви погубва; и ще бъдете изкоренени от земята, в която отивате да я завладеете.
63கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள்மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப் போடப்படுவீர்கள்.
64Господ ще те разпръсне между всичките племена от единия край на света до другия край на света; и там ще служиш на други богове, които нито ти си познавал нито бащите ти, на дърво и камък.
64கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
65Но и всред тия народи не ще намериш покой, нито ще има почивка за стъпалото на ногата ти; но там Господ ще ти даде треперене на сърцето, помрачаване на очите и изнемогване на душата.
65அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.
66Животът ти ще бъде в неизвестност пред тебе; и ти ще се боиш денем и нощем, и не ще бъдеш уверен за живота си.
66உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.
67Заран ще думаш: О да мръкнеше! и вечер ще думаш: О да съмнеше! поради страха, с който в сърцето си ще се страхуваш, и поради зрелищата, които с очите си ще виждаш.
67நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
68И Господ ще те върне в Египет с кораби през пътя, за който ти рекох: Вече няма да го видиш; и там ще [искате да] се продадете на неприятелите [си] за роби и за робини; но не ще има кой да ви купува.
68இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும், வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.