Bulgarian

Tamil

Isaiah

52

1Събуди се, събуди се, облечи силата си, Сионе; Облечи великолепните си дрехи, Ерусалиме, свети граде; Защото от сега нататък няма да влезе в тебе Необрязан и нечист.
1எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.
2Отърси от себе си пръстта; Стани, седни Ерусалиме! Освободи се от връзките по шията ти, Пленена дъщерьо сионова!
2தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
3Защото така казва Господ: Продадохте се за нищо; И ще бъдете изкупени без пари.
3விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4Защото така казва Господ Иеова: Людете Ми слязоха изпърво в Египет, за да поживеят там; [После] и асирийците ги угнетяваха без причина.
4பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
5Сега, прочее, що да правя тук, казва Господ. Тъй като людете Ми се взеха за нищо? Владеещите над тях вият, казва Господ, И името Ми непрестанно се хули всеки ден.
5இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6Затова людете Ми ще познаят Моето име; Затова ще познаят в оня ден, Че Аз съм, Който говоря, ето, Аз.
6இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7Колко са прекрасни върху планините Нозете на онзи, който благовествува, който проповядва мир! Който благовествува добро, който проповядва спасение! Който казва на Сиона: Твоят Бог царува!
7சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம்பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.
8Ето гласът на стражите ти! издигат гласа си, Всички възклицават; Защото ще видят ясно с очите си Как Господ се връща в Сион.
8உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள்.
9Възкликнете, запейте заедно, Запустели ерусалимски места; Защото Господ утеши людете Си, Изкупи Ерусалим.
9எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.
10Господ запретна светата Си мишца Пред всичките народи; И всичките земни краища ще видят Спасението от нашия Бог.
10எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.
11Оттеглете се, оттеглете се, излезте от там. Не се допирай до нечисто; Излезте изсред него; Очистете се вие, които носите съдовете Господни;
11புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.
12Защото няма да излезете набързо, Нито ще пътувате бежешком, Защото Господ ще върви пред вас, И Израилевият Бог ще ви бъде задна стража.
12நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
13Ето, служителят Ми ще благоуспее, Ще се възвиси и издигне, и ще се възнесе твърде високо.
13இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.
14Както мнозина се чудеха на тебе, (Толкова бе погрозняло лицето му, повече от [лицето на] кой да е бил човек, И образът му от [образа на] кой да е от човешките синове),
14மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.
15Така той ще удиви много народи; Царете ще затворят устата си пред него, Защото ще видят онова, за което не им се е говорило, И ще разберат това, което не са чули.
15அப்படியே, அவர் அநேகம் ஜாதிகளின்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.