Tamil

聖經新譯本 (Simplified)

Amos

2

1கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.
1惩罚摩押
2மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்; மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்.
2我必降火在摩押,烧毁加略的堡垒;在扰攘、吶喊、吹角声中,摩押必被消灭。
3நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடேகூட அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3我必剪除他的掌权者,也把他所有的领袖一同杀死。’这是耶和华说的。
4மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.
4惩罚犹大“耶和华这样说:‘犹大三番四次犯罪,我必不收回惩罚他的命令;因为他弃绝耶和华的律法,不遵守他的典章;反被他们列祖跟从的偶像,使他们走错了路。
5யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
5我必降火在犹大,烧毁耶路撒冷的堡垒。’
6மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே.
6惩罚以色列“耶和华这样说:‘以色列三番四次犯罪,我必不收回惩罚他的命令;因为他为了银子卖义人,为了一双鞋卖穷人。
7அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.
7他们践踏穷人的头,好像践踏地面的尘土;他们把困苦人应有的权益夺去;儿子和父亲与同一个女子亲近,故意亵渎我的圣名。
8அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
8他们在各祭坛旁,躺卧在别人抵押的衣服上面;在他们 神的殿中,饮用拿剥削回来的钱所买的酒。
9நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும் தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,
9我不是在他们面前把亚摩利人消灭了吗?亚摩利人虽像香柏树高大,像橡树那样坚固;我却要灭绝它树上的果子,拔除树下的根。
10நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி,
10我不是带你们出埃及地,领你们在旷野度过四十年,叫你们得着亚摩利人的地为业吗?
11உங்கள் குமாரரில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.
11我从你们子孙中兴起先知,从年轻人中兴起拿细耳人;以色列人哪!这不是事实吗?’这是耶和华的宣告。
12நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.
12‘但你们迫使拿细耳人喝酒,吩咐先知说:不要说预言。
13இதோ, கோதுமைக்கட்டுகள் நிறைபாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் இருத்துகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற ஸ்தலத்தில் இருத்துவேன்.
13看哪!我要使你脚下的地摇荡,好像满载禾捆的车子摇荡一样。
14அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை.
14行动迅速的不能逃走,强而有力的不能施展他的勇力,勇士也不能救自己;
15வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன் கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின்மேல் ஏறுகிறவன் தன் பிராணனை இரட்சிப்பதுமில்லை.
15拿弓的人站立不住,跑得快的不能逃走,骑马的也不能救自己。
16பலசாலிகளுக்குள்ளே தைரியவான் அந்நாளிலே நிர்வாணியாய் ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16到那日,最勇敢的战士,也是赤身逃跑。’这是耶和华的宣告。”