1வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
1得救者的福乐
2அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
2必茂盛地开花,大大快乐,并且欢呼。黎巴嫩的荣耀、迦密和沙仑的华美也赐给它;人们必看见耶和华的荣耀、我们 神的华美。
3தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
3你们要坚固无力的手,稳固摇动的膝。
4மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
4又对那些忧心的人说:“你们要刚强,不要惧怕。看哪!你们的 神,他要来报仇,来施行报应,他必来拯救你们。”
5அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும்.
5那时,瞎子的眼必打开,聋子的耳必畅通。
6அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
6那时,瘸子必像鹿一般跳跃,哑巴的舌头必大声欢呼;旷野必涌出大水,沙漠必流出江河。
7வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக்கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.
7灼热的沙地必变为水池,干旱之地必变成泉源;在野狗的住处,就是它们躺卧之处,必成为青草、芦苇和蒲草生长的地方。
8அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
8那里必有一条大路,要称为“圣路”;不洁净的人不能经过,那是为那些行走正路的人预备的;愚昧的人不会在路上留连。
9அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
9那里必没有狮子,猛兽也不会上去,在那里必遇不见它们;
10கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.
10只有蒙救赎的人必归回,必欢呼地来到锡安;永远的喜乐必临到他们的头上;他们必得着欢喜和快乐,忧愁和叹息都必逃跑了。