Tamil

聖經新譯本 (Simplified)

Proverbs

19

1மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.
1敬畏 神必得好处
2ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
2一个人没有知识是不好的,脚步匆忙的,难免失足。
3மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.
3人的愚妄毁灭自己的道路;他的心却恼怒耶和华。
4செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.
4财富使朋友增多,但穷人连他的一个朋友也与他分离。
5பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
5作假见证的必难免受惩罚;吐出谎言的必不能逃脱。
6பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.
6尊贵的人,很多人求他的情面;慷慨施赠的,人人都作他的朋友。
7தரித்திரனை அவனுடைய சகோதரர் எல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.
7贫穷人的兄弟都恨他;他的朋友更疏远他。虽然他多多恳求他们,他们却不理会。
8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
8得着智慧的,爱惜自己的性命;保持明达的,必得益处。
9பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
9作假见证的必难免受惩罚;吐出谎言的终必灭亡。
10மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.
10愚昧人生活奢侈是不相称的,何况奴仆管辖领袖呢!
11மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
11人的明慧使他不轻易动怒;宽恕别人过失的,是自己的荣耀。
12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
12王的忿怒,好像狮子的吼叫,他的恩宠,如同草上的朝露。
13மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
13愚昧的儿子是父亲的祸患,吵闹的妻子好像雨水不停地滴漏。
14வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
14房屋与财富是祖宗遗留的产业;唯有明慧的妻子是耶和华所赐的。
15சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
15懒惰使人沉睡,闲懒的人必受饥饿。
16கட்டளையை காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
16谨守诫命的,保全自己的性命;轻忽自己道路的,必致死亡。
17ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
17恩待穷人的,等于借钱给耶和华;他所行的,耶和华必偿还。
18நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.
18趁着还有指望的时候,要管教你的儿子;不可存心任他死亡。
19கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.
19常发烈怒的人,必须受罚,如果你帮助他,就必须一而再帮助他。
20உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
20你要听劝告,受管教,好使你将来作个有智慧的人。
21மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
21人心里的谋算很多,唯有耶和华的计划能实现。
22நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி.
22人所渴望的,就是忠诚;作穷人比作撒谎的人还好。
23கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
23敬畏耶和华的,得着生命;他必安居知足,不会遭受祸患。
24சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.
24懒惰人把手放在盘子里,连拿食物送回口边,也不愿意。
25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
25责打好讥笑人的,愚蒙人就会变得精明;责备聪明人,他就会明白知识。
26தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
26虐待父亲,赶走母亲的,是贻羞可耻的儿子。
27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.
27我儿,你若是停止听受管教,就会偏离知识的言语。
28பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
28无赖作见证,嘲笑公平,恶人的口,吞吃罪孽。
29பரியாசக்காரருக்கு தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.
29刑罚是为好讥笑人的预备的,鞭打是为愚昧人的背预备的。