1“Do you know the time when the mountain goats give birth? Do you watch when the doe bears fawns?
1வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?
2Can you number the months that they fulfill? Or do you know the time when they give birth?
2அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் ஈனுங்காலத்தை அறிவாயோ?
3They bow themselves, they bring forth their young, they end their labor pains.
3அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.
4Their young ones become strong. They grow up in the open field. They go forth, and don’t return again.
4அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும்.
5“Who has set the wild donkey free? Or who has loosened the bonds of the swift donkey,
5காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
6Whose home I have made the wilderness, and the salt land his dwelling place?
6அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன்.
7He scorns the tumult of the city, neither does he hear the shouting of the driver.
7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை.
8The range of the mountains is his pasture, He searches after every green thing.
8அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும்.
9“Will the wild ox be content to serve you? Or will he stay by your feeding trough?
9காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?
10Can you hold the wild ox in the furrow with his harness? Or will he till the valleys after you?
10படைச்சால்களை உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரிலே பூட்டுவாயோ? அது உனக்கு இசைந்து பரம்படிக்குமோ?
11Will you trust him, because his strength is great? Or will you leave to him your labor?
11அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ?
12Will you confide in him, that he will bring home your seed, and gather the grain of your threshing floor?
12உன் தானியத்தை அது உன்வீட்டில் கொண்டுவந்து, உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?
13“The wings of the ostrich wave proudly; but are they the feathers and plumage of love?
13தீக்குருவிகள் தங்கள் செட்டைகளை அசைவாட்டி ஓடுகிற ஓட்டம், நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?
14For she leaves her eggs on the earth, warms them in the dust,
14அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய்,
15and forgets that the foot may crush them, or that the wild animal may trample them.
15காலால் மிதிபட்டு உடைந்துபோகும் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை.
16She deals harshly with her young ones, as if they were not hers. Though her labor is in vain, she is without fear,
16அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக்காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.
17because God has deprived her of wisdom, neither has he imparted to her understanding.
17தேவன் அதற்குப் புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.
18When she lifts up herself on high, she scorns the horse and his rider.
18அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம்பண்ணும்.
19“Have you given the horse might? Have you clothed his neck with a quivering mane?
19குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ?
20Have you made him to leap as a locust? The glory of his snorting is awesome.
20ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? அதினுடைய நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்கிறது.
21He paws in the valley, and rejoices in his strength. He goes out to meet the armed men.
21அது தரையிலே தாளடித்து, தன் பலத்தில் களித்து, ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும்.
22He mocks at fear, and is not dismayed, neither does he turn back from the sword.
22அது கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணும்.
23The quiver rattles against him, the flashing spear and the javelin.
23அம்பறாத்தூணியும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது,
24He eats up the ground with fierceness and rage, neither does he stand still at the sound of the trumpet.
24கர்வமும் மூர்க்கமுங்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல் அநுமானித்து, எக்காளத்தின் தொனிக்கு அஞ்சாமல் பாயும்.
25As often as the trumpet sounds he snorts, ‘Aha!’ He smells the battle afar off, the thunder of the captains, and the shouting.
25எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம்பிடிக்கும்.
26“Is it by your wisdom that the hawk soars, and stretches her wings toward the south?
26உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ?
27Is it at your command that the eagle mounts up, and makes his nest on high?
27உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?
28On the cliff he dwells, and makes his home, on the point of the cliff, and the stronghold.
28அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும். றல்.
29From there he spies out the prey. His eyes see it afar off.
29அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
30His young ones also suck up blood. Where the slain are, there he is.”
30அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.