1هؤلاء بنو اسرائيل. رأوبين شمعون لاوي ويهوذا يساكر وزبولون
1இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
2دان يوسف وبنيامين نفتالي جاد واشير.
2தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்;
3بنو يهوذا عير واونان وشيلة. ولد الثلاثة من بنت شوع الكنعانية. وكان عير بكر يهوذا شريرا في عيني الرب فاماته.
3யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
4وثامار كنته ولدت له فارص وزارح. كل بني يهوذا خمسة.
4அவன் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்துபேர்.
5ابنا فارص حصرون وحامول.
5பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
6وبنو زارح زمري وايثان وهيمان وكلكول ودارع. الجميع خمسة.
6சேராவின் குமாரர் எல்லாரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
7وابن كرمي عخار مكدّر اسرائيل الذي خان في الحرام.
7சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன்.
8وابن ايثان عزريا.
8ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
9وبنو حصرون الذين ولدوا له يرحمئيل ورام وكلوباي.
9எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
10ورام ولد عمّيناداب وعمّيناداب ولد نحشون رئيس بني يهوذا
10ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
11ونحشون ولد سلمو وسلمو ولد بوعز
11நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
12وبوعز ولد عوبيد وعوبيد ولد يسّى.
12போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
13ويسّى ولد بكره اليآب وابيناداب الثاني وشمعى الثالث
13ஈசாய் தன் மூத்த குமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
14ونثنئيل الرابع وردّاي الخامس
14நெதனெயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும்,
15واوصم السادس وداود السابع.
15ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் எட்டாம் குமாரனையும் பெற்றான்.
16واختاهم صروية وابيجايل. وبنو صروية ابشاي ويوآب وعسائيل ثلاثة.
16அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
17وابيجايل ولدت عماسا وابو عماسا يثر الاسمعيلي
17அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலியனாகிய யெத்தேர் என்பவன்.
18وكالب بن حصرون ولد من عزوبة امرأته ومن يريعوث. وهؤلاء بنوها ياشر وشوباب واردون.
18எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
19وماتت عزوبة فاتخذ كالب لنفسه أفرات فولدت له حور.
19அசுபாள் சென்றுபோனபின் காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
20وحور ولد اوري واوري ولد بصلئيل.
20ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
21وبعد دخل حصرون على بنت ماكير ابي جلعاد واتخذها وهو ابن ستين سنة فولدت له سجوب.
21பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
22وسجوب ولد يائير وكان له ثلاث وعشرون مدينة في ارض جلعاد.
22செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலெயாத் தேசத்தில் இருபத்து மூன்று ஊர்கள் இருந்தது.
23واخذ جشور وارام حوّوث يائير منهم مع قناة وقراها ستين مدينة. كل هؤلاء بنو ماكير ابي جلعاد.
23கேசூரையும், ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர்.
24وبعد وفاة حصرون في كالب افراتة ولدت له ابيّاه امرأة حصرون اشحور ابا تقوع
24காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
25وكان بنو يرحمئيل بكر حصرون البكر رام ثم بونة واورن واوصم واخيّا.
25எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
26وكانت امرأة اخرى ليرحمئيل اسمها عطارة. هي ام اونام.
26அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
27وكان بنو رام بكر يرحمئيل معص ويمين وعاقر.
27யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
28وكان ابنا اونام شمّاي وياداع. وابنا شمّاي ناداب وابيشور.
28ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர் நாதாப், அபிசூர் என்பவர்கள்.
29واسم امرأة ابيشور ابيحايل وولدت له احبان وموليد.
29அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
30وابنا ناداب سلد وافّايم. ومات سلد بلا بنين.
30நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான்.
31وابن افّايم يشعي وابن يشعي شيشان وابن شيشان احلاي.
31அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய்.
32وابنا ياداع اخي شمّاي يثر ويوناثان. ومات يثر بلا بنين.
32சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல் மரித்தான்.
33وابنا يوناثان فالت وزازا. هؤلاء هم بنو يرحمئيل.
33யோனத்தானின் குமாரர், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர்.
34ولم يكن لشيشان بنون بل بنات. وكان لشيشان عبد مصري اسمه يرحع.
34சேசானுக்குக் குமாரத்திகளேயன்றி குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
35فاعطى شيشان ابنته ليرحع عبده امرأة فولدت له عتّاي.
35சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
36وعتّاي ولد ناثان وناثان ولد زاباد
36அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
37وزاباد ولد افلال وافلال ولد عوبيد
37சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
38وعوبيد ولد ياهو وياهو ولد عزريا
38ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
39وعزريا ولد حالص وحالص ولد إلعاسة
39அசரியா எலேத்சைப் பெற்றான்; ஏலெத்ஸ் எலெயாசாவைப் பெற்றான்.
40وإلعاسة ولد سسماي وسسماي ولد شلّوم
40எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.
41وشلّوم ولد يقمية ويقمية ولد اليشمع
41சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிசாமாவைப் பெற்றான்.
42وبنو كالب اخي يرحمئيل ميشاع بكره. هو ابو زيف. وبنو مريشة ابي حبرون.
42யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் குமாரருமே.
43وبنو حبرون قورح وتفّوح وراقم وشامع.
43எப்ரோனின் குமாரர், கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
44وشامع ولد راقم ابا يرقعا. وراقم ولد شمّاي.
44செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
45وابن شمّاي معون ومعون ابو بيت صور.
45சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
46وعيفة سرية كالب ولدت حاران وموصا وجازيز. وحاران ولد جازيز.
46காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
47وبنو يهداي رجم ويوثام وجيشان وفلط وعيفة وشاعف.
47யாதாயின் குமாரர் ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
48واما معكة سرية كالب فولدت شبر وترحنة.
48காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
49وولدت شاعف ابا مدمنّة وشوا ابا مكبينا وابا جبعا. وبنت كالب عكسة
49அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்.
50هؤلاء هم بنو كالب بن حور بكر افراتة. شوبال ابو قرية يعاريم
50எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
51وسلما ابو بيت لحم وحاريف ابو بيت جادير.
51பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
52وكان لشوبال ابي قرية يعاريم بنون هرواه وحصي همّنوحوت
52கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
53وعشائر قرية يعاريم اليثري والفوتي والشماتي والمشراعي. من هؤلاء خرج الصرعي والاشتاولي.
53கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில் சோராத்தியரும், எஸ்தவோலியரும் பிறந்தார்கள்.
54بنو سلما بيت لحم والنطوفاتي وعطروت بيت يوآب وحصي المنوحي الصرعي.
54சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதி ஜனங்களுமே.
55وعشائر الكتبة سكان يعبيص ترعاتيم وشمعاتيم وسوكاتيم. هم القينيون الخارجون من حمّة ابي بيت ركاب
55யாபேசில் குடியிருந்த கணக்கரின் வம்சங்கள், திராத்தியரும் சிமாத்தியரும் சுக்காத்தியருமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியாரான கேனியர் இவர்களே.